எங்கள் தரிசனம்:
உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் ஊழியக்காரர்கள் மற்றும் திருச்சபை மக்களை கடைசிகால எழுப்புதலுக்காக தரிசன தலைவர்களாக கொலோசெயர் 1:28 வசனத்தின்படி உருவாக்குவது எங்கள் தரிசனம். அதற்காக மாற்கு 10 :45 வசனத்தில் நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாக்கின்படி உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் ஊழியக்காரர்கள் மற்றும் திருச்சபை மக்களுக்கு கிறிஸ்துவுக்குள் வேலைக்காரர்களாக இருக்கும்படி எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம். | தெசலோனிக்கேயர் 5:23,24 வசனங்களின்படி பரலோக தேவன் நம்மை வழி நடத்துவார்.
எங்கள் பணி
சர்வதேச வேதாகமக் கல்வியும் / பல்கலைக்கழகமும்
சர்வதேச வேத ஆராய்ச்சி மற்றும் வேதாகம மொழிபெயர்ப்பு பணி
சர்வதேச போதகர்கள் கருத்தரங்கு
சர்வதேச பெண்கள் ஊழிய கருத்தரங்கு
சர்வதேச மிஷனரி கருத்தரங்கு
சர்வதேச வாலிபர்கள் கருத்தரங்கு
சர்வதேச கிறிஸ்தவ குடும்ப கருத்தரங்கு
சுய முயற்சிகள் நடத்தி சுய தொழில்களை உருவாக்குதல்
போ அல்லது அனுப்பு என்னும் மிஷனரி கருத்தரங்கு திருச்சபைகள் உருவாக்குதல்
தேவனை அறியாத மக்களில் திருச்சபைகளை கட்டிக் கொடுத்தல்
பரிசுத்த வேதாகமம் வாசிக்க முடியாதவர்களுக்கு இலவசமாய் கொடுத்தல்
மொழி வகுப்புகள்
எங்கள் செயல்பாடுகள்
ஆராதனை மையம்
ஒவ்வொரு வாரமும் ஒன்றுபட்ட ஆராதனை மற்றும் ஜெபம்.
வேதாகம கல்வி
சத்தியம், ஒழுக்கம், சேவை ஆகியவற்றில் பயிற்சி.
சுவிசேஷ பணி
நற்செய்தியை சமூகங்களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்லல்.
வாலிபர் சங்கம்
எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஊக்கம்.
குடும்ப ஊழியம்
குடும்ப ஒற்றுமை, உறுதி, மற்றும் வளர்ச்சி.
சுய உதவி
சுய தொழில் மற்றும் திறன் வளர்ச்சிக்கான ஆதரவு.
பெண்கள் சேவை
நம்பிக்கையும் தலைமையும் வலுப்படுத்தும் தளம்.
வேதாகம ஆராய்ச்சி
ஆழமான ஆய்வும் நடைமுறை பயன்பாடும்.
மொழி வகுப்புகள்
புதிய மொழிகளின் மூலம் சேவையின் எல்லையை விரிவாக்குதல்.
பட்டமளிப்பு பயணம்
கல்வி நிறைவு மற்றும் சேவை அனுப்புதல்.
கருணை சேவை
உதவி, அன்பு, மற்றும் சமூக வளர்ச்சி.
ஜெபக் கூட்டம்
ஆழமான ஜெபம் மற்றும் ஆன்மீக புதுப்பிப்பு.
எங்கள் விசுவாச பிரமாணம்
வானத்தையும் பூமியையும் தனது ஒரே பேறான குமாரனை கொண்டு படைத்த சர்வ வல்லமையுள்ள பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறேன். அவருடைய ஒரேபேபறான குமாரனான நம்முடைய இரட்சகர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறேன். பரிசுத்த வேதாகமத்தின் தீர்க்கதரிசன வசனங்களின்படி அவர் பரிசுத்த ஆவியினால் கன்னி மரியாளிடத்தில் உற்பவித்து பிறந்தார். பொந்தியு பிலாத்துவின் காலத்தில் என்னுடைய பாவங்களுக்காக பாடுபட்டு கோர சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு பாதாளத்துக்கு இறங்கினார். மூன்றாம் நாளில் மரித்தோரிடத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். உன்னதத்துக்கேறி பரலோகத்தில் சர்வ வல்லமையுள்ள பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார். அவ்விடத்திலிருந்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக்கொண்டிருக்கிறார். அவர் தம்முடைய சொந்த இரத்தத்தினால் சம்பாதித்த தம்முடைய மணவாட்டியான திருச்சபையை தன்னிடத்தில் எடுத்துக்கொள்ளவும் பின்பு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயந்தீர்க்க வருகிறார்.
எங்கள் யூடியூப் வீடியோ
